ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டக் கலந்தாய்வு – சீமான் வாழ்த்து

26

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த சோழ மண்டல மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் இணையம் வழி 27-06-2021 மாலை 6 மணி அளவில் தொடங்கி‌ நடைபெற்றது.

தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளின் மாவட்டப் பொறுப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகளான தொகுதி தலைவர் தொகுதி செயலாளர் தொகுதி பொருளாளர் உள்ளிட்டவர்களும், மயிலாடுதுறை மண்டலச் செயலாளர் கலியபெருமாள், மன்னார்குடி தொகுதி வேட்பாளர் அரவிந்தன்,மாநில வழக்கறிஞர் பாசறை துணைத் தலைவர் வழக்கறிஞர் முத்துமாரியப்பன், மாநில வழக்கறிஞர் பாசறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் உமர், மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள், மாநில சுற்றுச்சூழல் பாசறை தலைவர் காசிராமன், மாநில வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பேரா முனைவர் செந்தில்நாதன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் மருத்துவர் சர்வத் கான், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில்,மாநில ஒருங்கிணைப்பாளர் ஹீமாயூன் கபீர், உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அயலகத்திலிருந்து செயற்கள புரலவர்களில் ஒருவரான மார்க்ஸ் சுப்பிரமணியம் கலந்துகொண்டு செயற்கள பங்கேற்பு குறித்து உரையாற்றினார்.

இக் கலந்தாய்வில் உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர்கள் மாற்றம்/ தேர்வு, நகர ஒன்றிய கிளை கட்டமைப்பு பணிகள் குறித்து கருத்துப் பகிர்வு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு பொறுப்பாளர்களை வாழ்த்திப் பேசினார்.