20.06.2021 ஞாயிற்றுக்கிழமை, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதல்படி வருங்கால தலைமுறையினரின் செழுமையான வாழ்வு வேண்டி, குறுங்காடு அமைப்பதில் நாகர்கோவில் தொகுதி- சுற்றுச்சூழல் பாசறை சார்பாக “சின்னக் கலைவாணர் விவேக் குறுங்காடு” எனும் பெயரில் நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில் முதற்கட்டமாக புல் புதர்களை அகற்றி குறுங்காடு வளர்த்திட ஏதுவாக செவ்வகக் குழி வெட்டப்பட்டு புல் மற்றும் காய்கறி கழிவுகள் கொண்டு வளர்தளம் அமைக்கப்பட்டது.