தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க மாநில மாநாடு முனைவர் தொ.பரமசிவன் படத்திறப்பு – சீமான் பேருரை

560

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க மாநில மாநாடு முனைவர் தொ.பரமசிவன் படத்திறப்பு – சீமான் பேருரை | நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் 18வது மாநில மாநாடு 20.02.2021 அன்று தென்காசி மாவட்டம், குற்றாலம் காசிமேஜர்புரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக மாலை 04 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று, மறைந்த தமிழ்ப் பண்பாட்டு பேராசான் முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மாநாடு நிறைவுப் பேருரையாற்றினார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக சீமான் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சராசரி இளைஞனாக பொழுதுபோக்குகளில் நாட்டம் கொண்டிருந்த என்னுள் மக்கள் நலன் சார்ந்த சிந்தனையை விதைத்து சராசரி எனது கல்லூரி பேராசிரியரும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வறிஞர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்ததில் பெருமையடைகிறேன். இதழியல் துறையின் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்றுள்ள இவ்வரலாற்றுப் பெருநிகழ்வில் பங்கேற்றது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) எங்களுக்குத் துணையாக இருங்கள்! நாங்கள் உங்களுக்கு உயிராக இருப்போம்! மக்களின் நலனுக்காக இனி வருங்காலங்களிலும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு சீமான் அவர்கள் உரையாற்றினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஉலகத் தாய்மொழி நாளில் தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா! – சீமான் பேரழைப்பு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி – கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்