கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா

126

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி,கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்,பெரியஓபுளாபுரம் ஊராட்சி, காயலார்மேடு கிளையில் ஏறத்தாழ ஒரு வருடகாலமாக பலத்தரப்பட்ட கட்சி பிரமுகர்களால் கொடி ஏற்ற முடியாமல் இருந்த நிலையில் சண்டையிட்டு சமரசமின்றி தமிழ்மறையோன் வள்ளுவ பெருந்தகை திருவள்ளுவர் தினத்தன்று(15/01/2021) ஐயன் வள்ளுவன் நினைவாக வெற்றிகரமாக காயலார்மேடு கிராமத்தின் நியாய விலைக்கடை எதிரில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றப்பட்டது ஏற்றப்பட்டது இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு மா.நந்திவர்மன்.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ச.சுரேசுகுமார், திருவள்ளூர்(வ)மாவட்ட தலைவர் கு.உமாமகேசுவரன்,தொகுதி செயலாளர் வழக்கறிஞர் சி.ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் தொகுதி தலைவர் த.கணேசு,தொகுதி செய்தி தொடர்பாளர் தி.இராச்கமல் அவர்களின் முன்னிலையில் மற்றும் தொகுதி,ஒன்றிய, ஊராட்சி,கிளை,அனைத்துநிலை கட்சி,பாசறைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு கொடியேற்று விழாவை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்