“இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்” – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு

166

“இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்” – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு

‘ஒரே நாடு! ஒரே தலைவர்’ எனும் முழக்கம் ஏற்புடையதல்ல; எல்லாவற்றிற்கும் எதற்கு டெல்லியைச் சார்ந்திருக்க வேண்டும்? தலைநகரங்களைப் பரவலாக்க வேண்டும். அதற்கு இந்திய நாட்டிற்கு நான்கு தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என சகோதரி மம்தா பானர்ஜி அவர்கள் கூறியிருப்பது காலத்திற்கேற்ற சாலச்சிறந்த கருத்தாகும். அதனை வரவேற்று முழுமையாக ஏற்கிறேன்.

தலைநகரங்களைப் பரவலாக்குவதன் மூலமே வளர்ச்சியைக் கடைக்கோடி வரை கொண்டு செல்ல முடியும் என்பதையுணர்ந்தே, தமிழ்நாட்டில் ஐந்து மாநிலத் தலைநகரங்கள் இருக்க வேண்டும் எனும் முழக்கத்தை முன்வைக்கிறோம். அதேபோல, இந்தியாவிற்கும் நான்கு தலைநகரங்கள் வேண்டும் எனும் சகோதரி மம்தா பானர்ஜியின் கருத்தை வழிமொழிந்து, அத்தோடு நான்கு தலைநகரங்களில் ஒரு தலைநகரம், தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கப்பட வேண்டும் எனும் எமது கோரிக்கையையும் இணைத்து அதனையும் முன்வைக்கிறேன். அதிகாரப் பரவலாக்கலும், மாநிலங்களின் தன்னாட்சியுரிமையுமே நாட்டின் ஒருமைப்பாட்டையும், தேசிய இனங்களிடையே சமத்துவத்தையும் தக்கவைத்து, நாட்டின் இறையாண்மையைக் காக்கத் துணைநிற்கும் என்பதையுணர்ந்து, சகோதரி மம்தா பானர்ஜியின் இக்கருத்துக்குத் வலுசேர்க்க வேண்டியது ஒவ்வொரு தேசிய இனங்களின் தலையாயக் கடமையாகும்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Seeman Welcomes West Bengal CM Mamata Banerjee’s Notion that India Needs Four Capitals!

‘The One Country; One Leader’ Approach is not Appropriate. Why should we depend only on Delhi for everything? Capitals need to be decentralized! Sister Mamata Banerjee’s statement that India should adopt the notion of four capitals for its best interest is the need of the hour. I welcome it and fully accept it.

In Thamizh Nadu, realizing that widespread growth can only be achieved through creation of new capitals, we are proposing the notion of having five state capitals. Similarly, I support Mamata Banerjee’s idea that Indian Union should have four capitals, and propose that there should one capital from Thamizh Nadu. It is the chief duty of every national race to reinforce this view of Sister Mamata Banerjee, realizing that the devolution of power and the autonomy of the States will help maintain the unity of the Indian Union and equality among the national races and protect the sovereignty of the Indian Union.

– Seeman
Chief Coordinator
Naam Tamilar Katchi

முந்தைய செய்திசுற்றறிக்கை: திருமுருகன் பெருவிழா தொடர்பாக
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: விருதுநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்