திருச்செந்தூர் தொகுதி – வெள்ள பாதிப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

49

ஆழ்வை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னைக்காயல் கிராமம்.,கடும் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு
•விரைவாக நிவாரணப்பொருட்கள் வழங்கவும்,
•புன்னைகாயல் சாலைகளை சீரமைக்கவும் மற்றும்
•ஆற்று நீர் ஊருக்குள் வருவதை தவிர்க்க தடுப்பு சுவர் அமைக்கும் பணியையும் விரைவாக செயல்படுத்த வேண்டியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் ஆற்றப்பட்ட உரைகள், சுற்றியிருந்த வியாபார பெரு மக்களையும், பொது மக்களையும், பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்தது. பெண்கள், பெரியவர்கள், மாணவர்கள் உட்பட பலரும் நின்று கேட்டனர்.