பொன்னேரி – பொதுமக்களின் கருத்துகோராமல் எல்லை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்திற்கு எதிராக சுவரொட்டி

38

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி, தெற்கு ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பள்ளி ஊராட்சியில் L&T(Larsen & Toubro) அமைந்துள்ளது. தற்போது இதனை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.காட்டுப்பள்ளி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கோராமல் அதானி நிறுவனம் எல்லை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதையும்,தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் மதுரா செம்பாக்கம் பகுதிகள் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறதையும்,கடல் அரிப்புக்கு உள்ளாகும் கோரைக்குப்பம் பகுதி மக்களின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் முதற்கட்டமாக நாம் தமிழர் கட்சி காட்டுப்பள்ளி ஊராட்சியின் 13வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் க.தனலட்சுமி அவர்களால் 28/12/20 காலை 8 மணிக்கு கட்டண சுவரொட்டி ஒட்டப்பட்டது.

முந்தைய செய்திஆம்பூர்- வேலுநாச்சியாருக்கு வீரவணக்கம் கொடிக்கம்பம் ஏற்றுதல்
அடுத்த செய்திஅரியலூர் தொகுதி -திருமானூர் மேற்கு கொடியேற்றுதல் நிகழ்வு