பொன்னேரி தொகுதி – ஒன்றிய நகர கலந்தாய்வு

29

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 மாலை 5:00 மணிக்கு மெதூர் பேருந்து நிலையம் அருகில் முதல் மாடியில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதை குறித்த கலந்தாய்வு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.இக்கலந்தாய்வில் உறுப்பினர் அனைவரையும் சந்திப்பது,கட்சி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது,வாக்குசாவடி முகவர்களை நியமிப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு தொகுதியின் ஒன்றிய நகர பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.இக்கலந்தாய்வில் ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

 

முந்தைய செய்திவேப்பனப்பள்ளி – நாச்சிக்குப்பத்தில் புலிக்கொடி ஏற்றுவிழா
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி – கொடியேற்று விழா.