திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

29

09.11.2020 திங்கட்கிழமை திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு
உட்பட்ட திருச்சி செம்பட்டு 65வது வட்டதிற்க்குட்பட்ட எம்.கே.டி.காலனி
பகுதியில் பன்னெடுங்காலமாக வசிக்கும் மக்களை அவர்கள் குடியிருக்கும் தங்களின் வாழ்விடங்களை
நிரந்தரமாக காலி செய்ய வலியுறுத்தி அப்பகுதியில் அமைந்திருக்கும் தனியார் தோல் பதனிடு்ம் தொழிற்சாலையின்
நிர்வாகம் நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக காவல் துறையின் துணை கொண்டும்,குண்டர்கள் மற்றும் கூலிப்படையினர்
துணை கொண்டும் அப்பகுதியில் பரவி வாழும் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்
அவர்களின் வாழ்விடங்களை நிரந்தரமாக உறுதிசெய்ய அரசு சார்பாக பட்டா வேண்டியும் அதனை தொடர்ந்து தங்கள்
வாழ்விடங்களை காலி செய்ய வலியுறுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அனைத்து கட்சிகளின் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர் இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டதில் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.