ஓமன் செந்தமிழர் பாசறை – கொரொனா நோயில் இறந்தவருக்கு உதவி

233

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த
திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-20 அன்று மரணமடைந்தார். அவரது உடல் ஓமன் நாட்டின் சலாலா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த அப்துல் ரகீம் நாம் தமிழர் கட்சியின் புலம்பெயர் அமைப்பான செந்தமிழர் பாசறை ஓமனில் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.
எனவே அவரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் செந்தமிழர் பாசறை ஓமன் அமைப்பின் நிதியாக 1,10,000 ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் அவரின் குடும்பத்தாரிடம்
நாகர்கோவில் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கினார்கள்.
குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள்
மெல்கியாஸ், அனிட்டர் ஆல்வின், இப்திகார், பெல்வின், விஜயராகவன், கிம்லர் ஆகியோர்க்கு நாம் தமிழர் கட்சிக்கும் அப்துல் ரகீம் குடும்பத்தினர் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.