26/11/2020 அன்று வியாழக்கிழமை தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெத்தநாயக்கன்பாளையம் 9 மற்றும் 10 ஆம் வார்டுகள், நரசிங்கபுரம், ஆத்தூர்-மந்தைவெளி, மோட்டுர் போன்ற பகுதிகளில் புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலைப்பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.