முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மூத்த தமிழ்ப்பதிப்பாளரும், ‘க்ரியா’ பதிப்பாசிரியருமான ஐயா இராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால்…

0

மூத்த தமிழ்ப்பதிப்பாளரும், 'க்ரியா' பதிப்பாசிரியருமான ஐயா இராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பதிப்புத் துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது பெருந்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

பதிப்புத்துறையிலும், தமிழ் மொழி ஆய்விலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றியுள்ள பேராளுமை 'க்ரியா' இராமகிருஷ்ணன் அவர்களைத் தமிழ்ப்பதிப்புலகம் என்றென்றைக்கும் மறவாது.

ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(2/2)

முந்தைய செய்திமதுரை துணிக்கடை தீவிபத்து மீட்புப்பணியின்போது, இன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஜெயங்கொண்டம் தொகுதி – புலிக்கொடியேற்றும் விழா