பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூர் ஞாறா குளம் கடந்த எட்டு ஆண்டுகளாக பாசி, ஆகாயத்தாமரை, முட்புதர்கள் மற்றும் நெகிழி குப்பைகள் நிறைந்து மக்கள் பயன்படுத்த
முடியாவண்ணம் அழிவின் விளிம்பில் கிடந்தது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை உறவுகள் தொடர்ச்சியாக 4 வது வாரமாக குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர்.