காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய காட்பாடி ராஜாஜி நகரில் இருக்கும் கழிவு நீர் கால்வாய் வழிந்து சாலைகளில் ஓடுகின்றது, அதை சீர் செய்து மக்கள் செல்லும் பாதையை தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு தொகுதி தலைவர் திரு.நவீன் குமார்,செயலாளர் திரு.மணிகண்டன்,துணை செயலாளர் திரு. நந்தகுமார் மற்றும் தொகுதி இணை செயலாளர் திரு. ரமேசு முன்னிலையில் நடைபெற்றது.