சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

60

க.எண்: 202007195
நாள்: 30.07.2020

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 01-08-2020 மற்றும்
02-08-2020 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வு விவரம்
01-08-2020
சனி
மாலை 05:30
மணியளவில்
வேலூர், அணைக்கட்டு மற்றும் காட்பாடி தொகுதிகளுக்கான கலந்தாய்வு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
02-08-2020
ஞாயிறு
மாலை 05
மணியளவில்
கீழ்வைத்தியனான் குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

முந்தைய செய்திபேருந்து நிறுத்தத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி
அடுத்த செய்திமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்