திண்டுக்கல் – நீர ஓடை ஆக்கிரமித்து வைத்திருப்பது தொடர்பாக

14

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சி பழையகோட்டையில் நீரோடையை அந்த ஊராட்சி மன்ற தலைவர் திமுக வை சேர்ந்த சின்னு என்ற முருகன் தனது சொந்த பயன்பாட்டிற்காக ஆக்கிரமிப்பு செய்து அதை சாலையாக மாற்றிவருகிறார். அருகாமை தோட்டத்துவிவசாயிகள் தட்டிக்கேட்டதற்கு மிரட்டலும் விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மாண்புமிகு பழனிச்சாமி அவர்களும் உயர்நீதிமன்றமும் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது அடைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு செய்வது சட்டத்திற்கு புறம்பானது. இதனை உடனடியாக அரசு கவனத்தில் எடுத்து ஓடையை மீட்டிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் . மேலும் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது (7/10/2020) சுள்ளெறும்பு நால்ரோட்டில் நாம்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது என்பதையும் தெரிவித கொள்கிறோம்.