மதுரையில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தன்உயிரை மாய்த்து கொண்ட மாணவி ஜோதி துர்க்கா வின் உடலுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

7

மத்திய மாநில அரசின் கொடுமையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வின் அச்சம் காரணமாக தன் உயிரை மாய்த்து கொண்ட தங்கை ஜோதி துர்க்கா வின் உடலுக்கு மதுரை தத்தனேரி மயான பகுதியில் மாலை அணிவித்து அவர் உடல் முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அண்ணன் வெற்றிகுமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் நாம் தமிழ் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் இருளாண்டி மற்றும் மதுரை கிழக்கு தொகுதி மாணவர் பாசறை செயலாளர் அருண் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு
மா.சரவணன் 6380417410
மதுரை கிழக்கு தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்