சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு

49

க.எண்: 202009301
நாள்: 14.09.2020

சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

‘நீட்’ தேர்வு எனும் கொலைக்கருவியைக் கொண்டு மாணவப்பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொடுங்கோன்மையைக் கண்டித்தும், ‘நீட்’ தேர்வை முற்றாக ரத்து செய்யக்கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக மாநிலம் முழுவதும் அறப்போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவிருக்கிறது.

அதன் தொடக்கமாக, வரும் செப்டம்பர் 16, புதன்கிழமையன்று காலை 11 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் சென்னை, ஆலப்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தின் முன்பு கைப்பதாகை ஏந்தி, மாணவர் பாசறை சார்பாக மாபெரும் அறப்போராட்டம் நடைபெறவிருக்கிறது. அன்றைய நாளில், நாடெங்கிலும் உள்ள மாணவர் பாசறை நிர்வாகிகள் முன்னேற்பாட்டில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற பாசறை நிர்வாகிகள் என யாவரும் இணைந்து அவரவர் தங்களது இல்லத்தின் முன்பு கைப்பதாகை ஏந்தி கல்வியுரிமை முழக்கமிட்டு, நீட் தேர்வுக்கெதிரான எதிர்ப்புணர்வை மக்களிடம் பெருநெருப்பாய் பற்றவைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இந்த அறப்போராட்டத்தில் மாணவர்கள், மாந்தநேயப் பற்றாளர்கள், சனநாயகவாதிகள், மண்ணுரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள் என யாவரும் கட்சியைக் கடந்து, அரசியல் வேறுபாட்டுக்கும், கருத்து முரண்பாட்டுக்கும் அப்பால் ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக சனநாயகப்போர் செய்திட எங்களோடு கரம்கோரக்க வேண்டுமெனப் பேரன்போடு அழைக்கிறோம்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:

இடும்பாவனம் கார்த்திக்: +91-9095859921
சாரதிராஜா : +91-9500767589
சல்மான்: +91-9384251978

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகபசுர மூலிகை சாறு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திமதுரையில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தன்உயிரை மாய்த்து கொண்ட மாணவி ஜோதி துர்க்கா வின் உடலுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.