மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு துணை நிற்பது சனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை! – சீமான்

133

பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்ட கருத்துரிமை, 1947க்கு பிறகான சுதந்திர இந்திய ஒன்றியத்தில் பெயரளவிலேனும் நிலைநாட்டப்பட்டதாக நம்பிக்கொண்டருந்த வேளையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு தண்டனை விரும்பத்தகாத ஒன்று.

நீதித்துறை மீதான எண்ணற்ற இளையோர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பிராசந்த் பூசண் அவர்களோடு துணை நிற்பது சனநாயகத்தின் மீதும், அதனை அங்கீகரிக்கும் அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை.

இதுவரை ஏழைகளின் குரலாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் தோழனாகவும் வலம் வந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்கள் மேலும் உறுதியோடு இயங்க, நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே இன்றைய தேவை.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

The need of the hour is to support Lawyer Prashant Bhushan, who has been the voice of the poor and the companion of the oppressed, to be more and stay determined.

While the freedom of expression, which has been denied for centuries, was nominally established in the post-1947 Independent Indian Union, the contempt of court against advocate Prashant Bhushan is totally undesirable.

It is the duty of every one of us who believes in democracy and the constitution to support Prasanth Bhushan, who resonates the minds of countless young people in the judiciary system.

– Seeman
Chief Coordinator
Naam Tamilar Katchi

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திEIA 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை திரும்பபெற பதாகை ஏந்தும் போராட்டம் – அண்ணா நகர்