கலந்தாய்வு கூட்டம் – கொடைக்கானல்

18

தாய்த்தமிழ் உறவுகளுக்கு இரவு வணக்கம் நமது மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் ராஜசேகர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர் மைக்கேல் அவர்களின் முன்னிலையில், தொகுதி செயலாளர் முகமது ராஜக் அவர்களின் தலைமையில், இளைஞர் பாசறை செயலாளர் ஆசிக் மற்றும் மாணவர் பாசறை, மகளிர் பாசறை இணைந்து சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மற்றும் நம் குடும்பத்தில் உறுப்பினராக புதிதாக இணைந்த மகளிர் பாசறை உறவுகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லப்பட்டது.தீர்மானங்கள் என்னவென்றால்
1. கட்சியின் வளர்ச்சிக்காக என்ன செய்யப் போகிறோம்.
2. வருகின்ற சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் எவ்வாறு களம் ஆடுவது.
3. சுற்றுச் சூழலை எவ்வாறு பேணி பாதுகாப்பது.
4. கட்சியில் எவ்வாறு உறுப்பினர்களை இணைப்பது.
என பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

நாம் தமிழர்

கொடைக்கானல் செய்தித்தொடர்பாளர்,
சாம் பிரகாஷ்