தனியார் நிதி நிறுவனங்களின் கடன்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.சங்கரன்கோவில்

8

நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் தேரடி திடலில் 04/07/2020 தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களால் வழங்கப்பட்ட கடன்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்யக் கோரி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நிகழ்வில் மாவட்ட செயலாளர் இராசா சிங் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர்கள் வெங்கட கணேசு, கண்ணன், திருவை குமார் முன்னிலை வகித்தனர்.மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன் கண்டன உரை ஆற்றினார். மாவட்ட தலைவர் முத்துக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.