சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன போராட்டம் – பாபநாசம்

5

சாத்தான்குளம் சம்பவ கண்டன ஆர்ப்பாட்டம்

************

உறவுகளுக்கு வணக்கம்…

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவல்துறையின் அராஜக போக்கால் உயிரிழந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, நேற்று 04/07/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அம்மாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஐயா.பெருந்தமிழர்.கிருட்டிணகுமார் தலைமை தாங்கினார்.

தொகுதி செயலாளர் தூயவன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஜெகன், ஒன்றிய தலைவர் பிரபு, தொகுதி துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் பெருந்திரளாக கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருந்த உறவுகளுக்கும், ஆர்ப்பாட்டத்திற்காக உழைத்த உறவுகளுக்கும், கலந்துகொண்ட உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் 💐💐

இவண் :
இரா.துயவன்
செயலாளர்
பாவை சட்டமன்றத் தொகுதி

ஜெகன்
ஒன்றிய செயலாளர்
அம்மாப்பேட்டை ஒன்றியம்

செய்தி வெளியீடு :
சண்.மாறன் & இரா.சுகன்
செய்தித்தொடர்பாளர்கள்
பாவை சட்டமன்றத் தொகுதி
9715321345 , 7904564590