கடையம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்- ஆலங்குளம் தொகுதி

9

25.07.2020 சனிக்கிழமை அன்று கடையம் மேற்கு ஒன்றியம் சார்பில் நரையப்பபுரத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன

1. அன்று கடையம் மேற்கு ஒன்றிய மற்றும் கிளை பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

2. கடையம் ஒன்றிய அளவில் கட்சியின் மாணவர் பாசறை இலஞ்ச ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுச்சூழல் பாசறைகளின் நற்பணிகளை செயல்படுத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது

3. கடையம் – தென்காசி சாலையில் அமைந்துள்ள செட்டி மடம் பகுதியில் குப்பைகளை அகற்றி பூங்கா அமைத்திட அரசுக்கு கோரிக்கை மனு குறித்து திட்டமிடல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது

இக்கலந்தாய்வு நிகழ்வில் கோ.நாகலிங்கம் (தொகுதி செயலாளர்), கிங்ஸ்லி (சுற்றுச்சூழல் பாசறை தலைவர்), ஷேக் முகைதீன் (கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை தலைவர்) உதயகுமார் (இளைஞர் பாசறை துணை செயலாளர்) தமிழ்கவி (தொகுதி செய்தி தொடர்பாளர்) மற்றும் ரவி, ராஜசேகர், சந்தனக்குமார், சுப்ரமணியன் ஆகியோர் உட்பட பல உறவுகள் கலந்து கொண்டனர்.

தமிழ்கவி
9095377357
செய்தி தொடர்பாளர்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி.