திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவு – சீமான் இரங்கல்

27

இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலான பொறுப்புகளில் பணியாற்றிய திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவில் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபேராசிரியர் அறிவரசனாரின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்டிருக்கிற மாபெரும் இழப்பு- சீமான் இரங்கல்.
அடுத்த செய்திமாணவ மாணவியர்களுக்கு தேர்வில் வெற்றி பெற வாழ்த்திய மாணவர் பாசறை