தமிழில் பேர் மாற்ற கோரி மனு-ஓசூர் நாம் தமிழர் கட்சி

29
ஓசூர் நாம் தமிழர் கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்பு_பாசறை சார்பாக ஓசூரில் எழுந்தருளியுள்ள சந்திரசூடேசுவரர் கோயில் “தேரில் தமிழ்மொழியை தவிர்த்து’ மாற்று மொழி பதிந்திருப்பது மற்றும்
கல்யாண சூடேசுவரர் கோவிலில் உள்ள நன்கொடையாளர்கள் பற்றிய கல்வெட்டு பெயர் விவரங்களில் தமிழை தவிர்த்து மாற்று மொழியில் பதிந்திருப்பது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரியை 16.03.2020 காலை “கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர்கள்” சந்தித்து  பேசினர்.
தமிழ்நாட்டின் ஆட்சிமொழி ,அலுவல் மொழி தமிழ் என்பதால்
தமிழ்மொழி முதன்மையான மொழியாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 11.03.2020 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் மொழியில் அறிவிப்பு பலகை கல்வெட்டுகள் மாற்றவேண்டும்.
என  வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அறநிலையத் துறை அதிகாரி உரிய நடவடிக்கை விரைவில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று  உறுதியளித்தார்.
இப்பணியை அருண்இரவி சிவ.இராசேந்திரசோழன் இரசினிகாந்து  சுரேசுகுமார் சுடலைமணி
சி.இரா.பார்.தமிழ்ச்செல்வன் ஆவணங்களை சேகரித்து களப்பணியாற்றிய கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர்கள் செய்தனர்
முந்தைய செய்திகாணொளி பரப்புரை -கதிர்காமம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திமாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி