சிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

43

அறிக்கை: சிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பிரித்திகா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டச் செய்தி பேரதிர்ச்சியையும், பெரும்வேதனையையும் தருகிறது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் சிறுமி பிரித்திகாவின் குடும்பத்தினரை எதனைச் சொல்லித் தேற்றுவதென்று தெரியவில்லை. அக்குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது துயரில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.

இவ்விவகாரத்தில் சீரிய நடவடிக்கை எடுத்து, சிறுமியின் மரணத்திற்குக் காரணமான கொடுங்கோலர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் எனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 25 இலட்சம் இழப்பீடு தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம்(காஞ்சிபுரம்)
அடுத்த செய்திடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு