க.எண்: 2019100169
நாள்: 31.10.2019
‘துளி’ திட்டப் பணிகள் குறித்த மாநிலக் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் நிதி கட்டமைப்பினை உருவாக்குகிற திட்டமான ‘துளி’ திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற நவம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் தஞ்சாவூர் நாஞ்சிகோட்டையில் அமைந்திருக்கும் ஆல்வின் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதிச் செயலாளர்கள், மற்றும் ஈகையாளர்கள், கொடையாளர்கள், புரவலர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடுகிற மாபெரும் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
அவ்வயம் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் ‘துளி’ திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள ஈகையாளர்கள், கொடையாளர்கள், புரவலர்கள் அனைவரும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு தஞ்சை நடுவண் மாவட்டச் செயலாளர் கந்தசாமி (+91-9585416655) மற்றும் தஞ்சை தொகுதிச் செயலாளர் மோகன் கார்த்திக் (+917373767653) ஆகியோரை தொடர்பு கொள்ள வேண்டுமாய் கொள்ளப்படுகிறது.
துளித்துளியாய் இணைவோம்! பெரும் கடலாகும் கனவோடு!
– செந்தமிழன் சீமான்
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்