எரி நிலங்கள் ஆக்கிரமிப்பு-நாம் தமிழர் கட்சியினர் மீட்பு

105

கிருட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் பேரூராட்சியில் உள்ளது ஓர் சின்ன ஏரி. சுமார் 15 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரிதான் மத்தூர் பேரூராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய ஆதாரமாகவும் இருந்து வந்தது. ஆனால் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரி நிலங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக நீரின்றி வரண்டு போய் பேரூராட்சியின் குப்பைக்கிடங்காக மாறியுள்ளது.

மத்தூர் சுற்றியுள்ள கோழி கழிவுகள் கொட்டுவதும் ஏரிக்கரையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளதால் குடித்துவிட்டு கண்ணாடிப் மதுபாட்டில்களை வீசுவதுமாக ஏரி பாழடைந்து கிடந்தது.

இதை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் கவனத்தில் கொண்டு இந்த ஏரியை தூர்வாருவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரினர், முதலில் வாய்வழி அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து விடுதலைப் போராட்ட வீரரும் தமிழகத்தின் மாபெரும் அடையாளமாக வாழ்ந்த மதிப்பிற்குரிய ஐயா வ. உ. சிதம்பரனார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி சுற்றுச்சூழல் பாசறையின் மாநில இணைச் செயலாளர் திரு.வச்ரவேல் அவர்கள், சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் த. இல ஐயப்பன் அவர்கள், தருமபுரி மாவட்ட செயலாளர் ராமசாமி அவர்கள், கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் பிரபாகரன் அவர்கள், கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் அவர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் காசிலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வை திரு.பார்த்திபன் அவர்களால் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

துவங்கப்பட்டு நான்கு மணி நேர பணி நடைபெற்ற பிறகு “நாம் தமிழர் கட்சி” என்ற அடையாளத்தோடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் அரசு அலுவலர்களால் பணி நிறுத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் ஐயப்பன் அவர்களின் சட்டப்போராட்டத்தினால் 15 நாட்கள் இடைவெளியில் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளது. இதுவரை இந்த ஏரி தூர்வாரி கரைகளை பலப்படுத்தி அடர் காடுகள் உருவாக்கம் திட்டத்திற்கு சுமார் பத்து லட்சம் ரூபாய் திட்டமிடப்பட்டு நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்களால் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது,

மேலும் மத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சரியான விளையாட்டு மைதானம் இல்லாமல் முட்புதர் அடர்ந்து கிடந்த இடம் மதுபானம் குடிக்கும் கூடாரமாக மாறியிருந்ததை கண்டு ஊத்தங்கரை தொகுதி இணைச்செயலாளர் ஐயா பார்த்திபன் அவர்களின் சொந்த முயற்சியில் தற்போது அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் சுமார் நான்கு லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மத்தூர் பேரூராட்சி சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக *தூய்மை மத்தூர்* என்ற திட்டத்தின் அடிப்படையில் சுமார் 30 மக்கும் குப்பை தொட்டிகள் 30 மக்காத குப்பைகள் கொட்டுவதற்கான தொட்டிகள் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா- சாத்தூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-கரூர் வடக்கு நகரம்