அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் (11-10-2019)

44

அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் (11-10-2019) | நாம் தமிழர் கட்சி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு.கந்தசாமி அவர்களை ஆதரித்து 11-10-2019 வெள்ளிக்கிழமை மாலை ௦4 மணியளவில் விக்கிரவாண்டி கடை வீதியிலும் ௦6 மணியளவில் பனையபுரம் பேருந்து நிறுத்தம் அருகிலும் இரவு ௦8 மணியளவில் இராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகிலும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

எனவே விக்கிரவாண்டி தொகுதிக் களப்பணிகளில் இணைந்து செயற்பட வேண்டிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்