சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(அரியலூர், கடலூர்) | நாம் தமிழர் கட்சி
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நேர அட்டவணை பின்வருமாறு;
நாள் | நேரம் | கலந்தாய்வுக்கான மாவட்டம் | கலந்தாய்வு நடைபெறும் இடம் |
25-09-2019 புதன் |
காலை 09 மணி | அரியலூர் | செயிண்ட் மேரிஸ் திருமண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் அருகில், அரியலூர் |
பிற்பகல் 03 மணி | கடலூர் | அண்ணா திருமண மண்டபம், முருகா திரையரங்கம் அருகில், வடலூர் |
மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்