மனற்கொள்ளையை தடுக்கக்கோரி மனு-விளாத்திகுளம் தொகுதி

46
விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதியில் கீழ்நாட்டுக்குறிச்சி மற்றும் பல்லாகுளம் பகுதிகளில் நடைபெறும் மணற்கொள்ளையை தடுக்க வலியுறித்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் நாம்தமிழர்கட்சியினர் மனு அளித்தனர்
நாம்தமிழர்கட்சி  கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி  சார்பாக  விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதிகளில் சவுடு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று,  சட்டத்திற்கு புறம்பாக  நடைபெறும் மணற்கொள்ளையை தடுத்து நிறுத்திட வலியுறித்தி 27/08/2018 காலை 11 மணியளவில்  கோட்டாட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்குமாவட்டத் தலைவர் மருதம். மா.மரியப்பன் தலைமையில்  மனுஅளித்தனர்,
உடன்  கோவில்பட்டி தொகுதிப்பொருளாளர் தேவராசு, தொகுதி சுற்றுச்சூழல் பாசறைச்செயலாளர் பாலசுப்பிரமணியன்  கயத்தார் நகரச்செயலாளர் கருப்பசாமி மற்றும் விளாத்திகுளம் தொகுதித்தலைவர் காளிதாஸ்  உட்பட நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்…
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் கொடியேற்றும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு- விளாத்திகுளம் தொகுதி