காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி-பண்ருட்டி தொகுதி

24

பண்ருட்டி தொகுதி  நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் – மாதிரித் தேர்வு, பரிசளித்தல் நிகழ்வு 17.08.2019 அன்று காலை 9.00 மணியளவில் பண்ருட்டி நாம் தமிழர் கட்சி அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் நடைபெற்றது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் பங்கு பெற்றனர். பயிற்சி ஆசிரியர்கள் திரு.ஜோதி, திரு.ராமச்சந்திரன், திரு.கலிவரதன் ஆகியோர் காவலர் தேர்வு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.  காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த  நிகழ்வு மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆர்வத்தால் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. மாணவ – மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாலை நடைபெற்ற மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நாம் தமிழர் கட்சி பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன் பரிசுகளை வழங்கினார். பண்ருட்டி நகர செயலாளர் (கிழக்கு) வேல்முருகன், பண்ருட்டி நகர பொருளாளர்  (கிழக்கு) நிஜாமுதீன், புதுச்சேரி தொழிலாளர் பாசறை செயலாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.