கலந்தாய்வு கூட்டம்-பவானி தொகுதி

45

பவானி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி அவர்கள் முன்னிலையிலும் , தொகுதி தலைவர் தங்கராசு அவர்கள் தலைமையிலும் பவானி சட்டமன்றத்திற்கான உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர் கலந்தாய்வு 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை  மாரப்பம்பாளையத்தில் அமைந்துள்ள தமிழ் குடிலில் நடைபெற்றது.

இதில் பல்வேறு புதிய உறவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களது மேலான கருத்தினை பதிவு செய்தார்கள். பவானி சட்டமன்றத்தின் அடுத்த மூன்று மாதங்களுக்கான செயல்திட்டங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் உறுப்பினர் சேர்க்கை முகாம், மரம் நடுதல்,தெருமுனை பரப்புரை மற்றும் உள்ளாட்சித் தேர்தல், கிளைகள் திறப்பு போன்றவைகள் விவாதிக்கப்பட்டன.
முந்தைய செய்திசூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா.? – சீமான் சவால்
அடுத்த செய்திபொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம்-வில்லிவாக்கம்