பொங்கல் விழா -சூலூர் தொகுதி

36
பொங்கல் விழாவையொட்டி
நாம் தமிழர் கட்சி
சூலூர் சட்டமன்றத் தொகுதி
வீரத்தமிழர் முன்னணி சார்பாக
சூலூர் சூராத்தம்மன் கோயிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழா
 முடிவடைந்தவுடன் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் சீமான் அண்ணன் வருகையையொட்டி, சுவரொட்டிகள் ஒட்டுவதற்காக ஊராட்சி ஒன்றுக்கு நூறு சுவரொட்டிகள் பேரூராட்சி ஒன்றுக்கு 200 சுவரொட்டிகள் உறவுகள் ஏற்பாடு செய்து ஒட்டுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு காமாட்சிபுரம் இருகூர் ஆகிய நான்கு பகுதிகளில் அண்ணன் கையால் கொடியேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தைப்பூசத்தையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நமது சூலூர் தொகுதியில் ஐந்து இடங்களில் வேல் வழிபாடு நிகழ்த்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஐந்து இடங்கள் பின்வருமாறு
1.சூலூர், 2.நீலம்பூர் 3.வாகராயம்பாளையம் 4.காமாட்சிபுரம் மற்றும் 5.செஞ்சேரிமலை
வேல் வழிபாடு வரும் சனிக்கிழமை  19 ஜனவரி 2019 அன்று தொடங்கி 3 நாட்கள் திங்கட்கிழமை 21 சனவரி 2019 வரை வழிபாடு நடத்தி தைப்பூசத்திருவிழா அன்று நாம் வழிபாடு நடத்திய வேலை செஞ்சேரிமலை முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று நாட்களாக உறவுகள் தைப்பூசம் என்றால் வைத்து வழிபாடு நடத்தி செஞ்சேரிமலை முருகன் கோவிலுக்கு எடுத்து செல்லுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள வேல் வழிபாடு நடக்கும் இடத்தில் தவறாமல் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
வேல் வழிபாட்டு நெறிமுறைகள் 12 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக மாநில வீரத்தமிழர் முன்னணி சார்பாக  அச்சிடப்பட்டுள்ளது. வேல் வழிபாடு முன்னின்று நடத்தும் உறவுகள் அந்த வழிகாட்டு நெறிமுறை புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேல் வழிபாடு நடக்கும் ஒவ்வொரு குடிலுக்கும் 500 துண்டறிக்கைகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலதிக துண்டறிக்கை தேவைப்படும் உறவுகள் முன்கூட்டியே தெரியப்படுத்தவும்.