ஐயா கக்கன்  அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்

59
கடந்த 23.11.2018 அன்று
எளிமை,தூய்மை,நேர்மை,உண்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன்  அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி
சார்பில் நிகழ்வுகள் கொமரலிங்கம் பேரூராட்சியில் முன்னெடுக்கப்பட்டது!!
===
 நிகழ்வு  தொடக்கமாக
அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி எடுத்தனர் !!
 (2 -நிகழ்வு) புலிக்கொடி பறக்க !! நம் தமிழ்குடி சிறக்கும் !!  என்கிற முழக்கங்களோடு
புலி கொடி ஏற்றி வைத்தனர்!!
===
(3 – நிகழ்வு )
பெருந்தமிழர் கக்கன் அவர்களுக்கு புகழ் சுடரேற்றி  புகழ்வணக்க முழக்கங்களோடு மலர்த்தூவி மரியாதை செய்து துவங்கி வைத்தனர்!! தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலரும் மலர் வணக்கம் செலுத்தினார்கள் !!
===
(4 – நிகழ்வு )
கொமரலிங்கம் பேரூராட்சியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 25 மேற்பட்டோர்க்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கினர்!!
===
(5 – நிகழ்வு )
முன்நின்று நமது மண்ணுக்கும் மக்களுக்குமான  அரசியலில்
நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் டெங்கு காய்ச்சல் வரும்முன் தடுக்க  நிலவேம்பு சாறு  கொமரலிங்கம்பொதுமக்களுக்கு வழங்கினர்!!
நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும்,பொதுமக்கள்  அனைவருக்கும் நம்மாழ்வார் குடில் சார்பில் பேரன்பின் புரட்சி வாழ்த்துக்கள்!!
முந்தைய செய்திதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-வேலூர் தொகுதி