நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை,பனை விதை நடும் திருவிழா-வில்லிவாக்கம் தொகுதி

54
 ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா’ 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதி.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்! உயிர் காப்போம்!’ என்கிற உயரிய முழக்கத்தை முன்னிறுத்தி மரக்கன்றுகள் நடுதல், உழவாரப்பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் இயற்கை குறித்தானப் பரப்புரைகளை மேற்கொள்ளுதல் எனத் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து பல்லுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தும் பெரும்பணியினைச் செய்து வருகிறது.
அதனையொட்டி, வில்லிவாக்கம் தொகுதி  முழுக்க இருக்கிற சுற்றுச்சூழல் மேம்பட வேண்டிய இடத்தில் முதல் கட்டமாக ‘ஆயிரம் பனை விதை விதைத்தல் நிகழ்வு’ நடந்தது.
நிகழ்ச்சி தொடங்கிய நேரம் : மதியம்  12மணி.
இடம் : நாதமுனி சமிக்கை அருகில்