(2-9-2018) அன்று வடசென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் எழுவர் உயிரைக் காக்க உயிர்நீத்த தாரகை செங்கொடி, மற்றும் நீட் தேர்விற்கு எதிராக உயிரை மாய்த்துக் கொண்ட தங்கை அனிதா ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு, அவர்களின் சார்பாக நினைவுக் கொடிக்கம்பம் ஏற்றப்ட்டது, இந்த நிகழ்ச்சியை தொகுதின் மகளிர் பாசறையினர் ஏற்பாடு செய்திருந்தனர், நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி. அமுதாநம்பி அவர்கள் கலந்து கொண்டார், இதில் தொகுதியின் மற்ற பாசறையின் பொறுப்பாளர்களும், வடசென்னையின் மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில், கற்பூரவள்ளி,வெற்றிலை, துளசி, பிரண்டை , முடக்கத்தான், தூதுவளை போன்ற மூலிகைச் செடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்