ஆதரவற்ற முதியவருக்கு நாம் தமிழர் கட்சி உதவி- இராதகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி

26
22.09.2018 அன்று வள்ளலார் நகர் மேம்பாலத்தின் கீழே ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இருந்த முதியவரை நாம் தமிழர் கட்சியினர் காப்பகத்தில் சேர்க்க முடிவெடுத்தனர்…
அதன்படி ஆர்.கே.நகர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் திரு.அற்புதராஜ் தலைமையில், சென்னை வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்து குறிப்பாணை (Memo)  பெற்றுக்கொண்டனர்…
குறிப்பாணையைக் கொண்டு சூளையில் உள்ள சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான காப்பத்தில் (Shelter For Homeless) மாநகராட்சி அதிகாரியிடம் முறைப்படி ஒப்படைத்தனர் நாம் தமிழர் கட்சியினர்…
இந்நிகழ்வில் திரு.அற்புதராஜ் அவர்களுடன் களமாடியவர்கள்; ஆர்.கே.தொகுதி இணைச் செயலாளர் திரு.சதாம் உசேன், கொளத்தூர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் திரு.ராசா, ஆர்.கே.நகர் பகுதி பொறுப்பாளர் திரு.முருகேசன் மற்றும் ஆர்.கே.நகர் 47வது வட்ட செய்தி தொடர்பாளர் கோகுல் நாத்.