செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

356

வீரத்தமிழச்சி செங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – பெரம்பூர் | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக நேற்று 28-08-2018 மாலை 6 மணிக்கு சென்னை, பெரம்பூர் தொகுதிக்குட்பட்டவியாசர்பாடி, மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கவுரை நிகழ்த்தினார்.

முன்னதாக தங்கை செங்கொடியின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தார். இந்நிகழ்விற்கு. மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி தலைமை தாங்கினார் மேலும் மாநில ஒருங்கிணைபாளர்கள் கலைக்கோட்டுதயம், ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, அன்புத்தென்னரசன், பெரம்பூர் சரவணன், விருகை இராஜேந்திரன் மற்றும் மருத்துவர் சிவக்குமார், ஆன்றோர் அவைப் புலவர் மறத்தமிழ்வேந்தன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் சீதாலட்சுமி, குயிலி நாச்சியார், கௌரி, புனிதா மற்றும் ரெஜிமாபாபு மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், ஜெகதீசப்பாண்டியன், மாநிலச் செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், துறைமுகம் அன்வர்பேக், செங்கல்பட்டு நாகநாதன், பொள்ளாச்சி உமா மகேசுவரி, மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், மழலையர் பாசறை தமிழ் அமுது உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இப்பொதுக்கூட்டதில் ஏராளமான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.​

காணொளி:

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதித் தலைவர் வெற்றித்தமிழன், தொகுதிச் செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட தொகுதிப் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

[WRGF id=67692]


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084