சீமான் கைது: சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் – 24 பேர் கைது

23

சீமான் கைது: சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்த கடும் அடக்குமுறையைக் கையாளும் தமிழக அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் – 24 பேர் கைது

சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து வாடும் விவசாய மக்களைச் சந்தித்தற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்து அறிவிக்கப்படாத அடக்குமுறையை செயற்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.

சிறையிலடைக்கப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:
இரா.அன்புத்தென்னரசன்
க. பூபேஷ்
வெ.சுகுமாறன்
ஜா.மார்ட்டின்
பா.ராச்முருகன்
க.சிவக்குமார்
இர.வெங்கடேசன்
மு.பிரகாஷ்
ப.வெங்கட்
நா.சுரேஷ்
மு.ராஜா
பெ.கோபால்
நா.மணி
வீ.ஜெய்குமார்
ஞா.சசி
க.கார்த்திக்
க.இராஜேஷ்
கி.சிவராமகிருஷ்ணன்
சூ.சசிக்குமார்
ச.சுதர்சன்