புதிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி

45

உரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி புதிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் 1 அன்று உரத்தநாடு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தொகுதி செயலாளர் அ.கலைவேந்தன், தொகுதி தலைவர் வீ.சிவசன்முகராஜன் , வீரத்தமிழர் முன்னணி மண்டல செயலாளர் வீ.மாரிமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி இணை தலைவர் கோ.சிவமணி, இணை செயலாளர் ரெ. நாகராஜன், தொகுதி பொருளாளர் வேலு.ஆனந்தேஷ் , தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் தங்க.பிரபாகரன், தொகுதி இளைஞர் பாசறை இணை செயலாளர் மெ.நிரூபன், தொகுதி மாணவர் பாசறை இணை செயலாளர் கோகுல், தொகுதி இணையதள பாசறை செயலாளர் இர.தர்மசீலன், இணையதள பாசறை இணை செயலாளர் சா.வேலாயுதம், கிழக்கு ஒன்றிய இணை செயலாளர் கு.ரமேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தெற்கு ஒன்றிய தலைவர் கலைமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் சு.வேலு, வடக்கு ஒன்றிய இணை செயலாளர் சிவசங்கர், நகர ஒன்றிய செயலாளர் காசி.ஆனந்தன், நகர ஒன்றிய இணை செயலாளர் த.பாஸ்கரன், ந.சரவணன், க.வெங்கடேஷ் , முருகேசன், தியாகராஜன், ஜனகன், லெ.இளமாறன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களை அறிமுகம் செய்து கொண்டு, தொகுதியில் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

2. ஒவ்வொரு மாதமும் ஒன்றிய வாரியாக சந்தா வசூல் செய்து தொகுதிக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

3. எதிர்வரும் 03.04.2018 அன்று உரத்தநாடு பேருந்து நிலையத்தில் ONGC எதிர்ப்பு போராட்டக்குழு முன்னெடுக்கும் கண்டன பேரணி – பொதுக்கூட்டத்தில் உரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பங்கேற்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

4. ஒரு மாத காலத்திற்குள் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.

5. உரத்தநாடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கிளைகளில் உள்கட்டமைப்பை பலபடுத்துவது எனவும், விரைந்து புதிய கிளை கிராமங்களை உருவாக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

6. மக்கள் பிரச்சனைகளுக்கு உரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக போரட்டங்களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

7. எதிர்வரும் ஏப்ரல்12 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் அம்மாபேட்டையில் நடைபெறவுள்ள மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தில் உரத்தநாடு சட்டமன்ற தொகுதி சார்பாக பங்கேற்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

செய்திக்குறிப்பு: தர்மசீலன், இணையதள பாசறை செயலாளர், உரத்தநாடு தொகுதி