காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – தா. பேட்டை

39

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதிக்குட்பட்ட்ட தா.பேட்டை (தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவும் வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 04-04-2018 அன்று தா.பேட்டை (தாத்தையங்கார்பேட்டை) கடை வீதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் முசிறி இளைஞர் பாசறை செயலாளர் அஸ்வின் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நாகராசு முன்னிலை வகித்தார். கண்டன உரையை மாநில இளைஞர் பாசறை செயலாளர் துரைமுருகன், மாநகர மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் மாநகர மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சரவணன் ஆகியோர் பதிவு செய்தனர். மத்திய,மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.