செஞ்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு | 18.03.2018

61

செஞ்சி தொகுதியில் கட்சியின் கிளை கட்டமைப்பை வலுபடுத்தும் நோக்கில் கிராமந்தோறும் புதிய கிளை தொடங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை 18.03.2018 அன்று செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் சுரேஷ்குமார், வழக்கறிஞர் ஏழுமலை பங்கேற்று சிறப்பித்தனர். கிருஷ்ணன் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தலைமை வகித்தார். வெங்கடேசன் செஞ்சி தொகுதி தலைவர், பச்சையப்பன் செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் இவர்கள் இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். பழனி செஞ்சி இணைச் செயலாளர், அன்சர் செஞ்சி துணைச் செயலாளர், பூபதி செஞ்சி பொருளாளர், சக்திவாசன் செஞ்சி இளைஞர் பாசறை செயலாளர், இளவரசன் செஞ்சி மாணவர் பாசறை செயலாளர் மற்றும் கட்சி உறவுகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.தாமு, சதிஸ், வெங்கடேசன், தீனா, ராமதாஸ், மற்றும் கிளை பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.