உறுப்பினர் சேர்க்கை முகாம், துண்டறிக்கை பரப்புரை மற்றும் கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம் – ஓசூர்

130

உறுப்பினர் சேர்க்கை முகாம், துண்டறிக்கை பரப்புரை மற்றும் கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம் – ஓசூர்

நேற்று (04/03/2018 – ஞாயிற்றுக்கிழமை) கிருட்டிணகிரி மாவட்டம் – ஓசூர் – மூக்கொண்டப்பள்ளி – லால் பகுதியில் ஓசூர் நாம் தமிழர் கட்சி மேற்கு ஒன்றியத்தின் சார்பாக காலை முதல் மாலை வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. இருபதிற்கும் மேற்பட்ட புதிய உறவுகள் தங்களை கட்சியுடன் இணைத்துக் கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் தாங்கிய 1000 துண்டறிக்கைகளை அப்பகுதிவாழ் மக்களிடம் உறவுகள் சென்று சேர்த்தனர்.

மேலும் நேற்று அதே இடத்தில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை ஓசூர் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் சார்பில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. பதினைந்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள், கட்சியின் செயற்பாட்டு வரைவுக் கொள்கைகளை பொது மக்களிடம் பரப்புரைச் செய்தனர்.

காலை முதல் இரவு வரையிலான இந்நிகழ்வினை ஓசூர் மாவட்டத் தலைவர் திரு.தமிழ்மாறன் மற்றும் செயலாளர் திரு. தே. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னின்று தலைமையேற்று சிறப்பாகச் செய்தனர்.

செய்தி வெளியீடு:

செகதீசு மணிராசு,
அலைபேசி: 9008003328
மாவட்ட செய்தித் தொடர்பாளர்,
நாம் தமிழர் கட்சி,
ஓசூர்.
கிருட்டிணகிரி மாவட்டம்.