கொடியேற்று விழா – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி ( தஞ்சாவூர் மாவட்டம் )

97

நிகழ்வு: 1

தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 20-08-2017 ஞாயிறு மாலை 6 மணியளவில் அருமுளை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. சோழ மண்டல செயலாளர் வழக்குரைஞர் அ.நல்லதுரை புலிக்கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் உரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தரும பாலா, மாவட்ட தலைவர் மு.கந்தசாமி, மாவட்ட பொருளாளர் கலைவேந்தன், மூத்த ஆலோசகர் அண்ணாதுரை, மாவட்ட மருத்துவர் பாசறை செயலாளர் திருநாவுக்கரசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் மா.கார்த்திக், இளையராஜா, மேற்கு பகுதி செயலாளர் ஆனந்தேஷ், வடக்கு பகுதி செயலாளர் அமல்ராஜ், அருமுளை ரமேஷ், பொன்னாப்பூர் தர்மசீலன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி உறவுகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். அருமுளை கிராம பொதுமக்களுக்கு உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பழம்தரும் மரக்கன்றுகளும், புத்தகங்களும் வழங்கப்பட்டது.

நிகழ்வு:2

தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 20-08-2017 ஞாயிறு மாலை 6 மணியளவில் பூவத்தூர் வடக்குபகுதி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னாள் காவல்துறை அதிகாரி சிவா புலிக்கொடியை ஏற்றினார். பொன்னாப்பூர் தர்மசீலன், வெள்ளூர் இலக்கியராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் உரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தரும பாலா, மாவட்ட தலைவர் மு.கந்தசாமி, மாவட்ட பொருளாளர் கலைவேந்தன், மூத்த ஆலோசகர் அண்ணாதுரை, மாவட்ட மருத்துவர் பாசறை செயலாளர் திருநாவுக்கரசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் மா.கார்த்திக், இளையராஜா, சவுதி பொறுப்பாளர் காசி ஆனந்தன், நீலமேகம், தமிழரசன், பூவத்தூர் நிரூபன் சக்கரவர்த்தி, இளமாறன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி உறவுகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். பூவத்தூர் கிராம பொதுமக்களுக்கு உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பழம்தரும் மரக்கன்றுகளும், புத்தகங்களும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை (கிருட்டிணகிரி – கிழக்கு மாவட்டம்)
அடுத்த செய்திதமிழகச் சாரணர் இயக்கத்துக்கு எச்.ராஜா தலைவராவது சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும்! – சீமான்