இம்மானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்கம் – கோவில்பட்டி

119

பெருந்தமிழர் ஐயா இம்மானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்கம் – கோவில்பட்டி | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி சார்பாக சமூகநீதிப்போராளி பெருந்தமிழர் ஐயா இம்மானுவேல் சேகரனாரின் 60ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி கோவில்பட்டியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நேற்று 11/09/2017 காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு, கோவில்பட்டி தொகுதிப்பொருளாளர் தியாகராசன் மற்றும் துணைச்செயலாளர் செண்பகராசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன் மற்றும் இளைஞர் பாசறைச்செயலாளர் கிருட்டிணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிழக்கு ஒன்றியச்செயலாளர் அனிதா இராசேசு செய்திருந்தார்.

இதில் விளாத்திகுளம் தொகுதிச்செயலாளர் செல்லப்பா மற்றும் ஐயா முத்துக்கிருட்டிணன் ( ஆசிரியர் ஓய்வு ) விளாத்திகுளம் தொகுதியைச்சேர்ந்த இணைச்செயலாளர் காளிதாஸ் ,ஒன்றியச்செயலாளர் கரிகாலன் (எ) இரமேசு, நகரத்ததலைவர் முருகானந்தம் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆனந்த், பிரேம், சதீசு, மற்றும் முத்தையா கோவில்பட்டி தொகுதியைச்சேர்ந்த துணை தலைவர்கள் மகேசு , இராமமூர்த்தி , தொகுதி தொழிற்சங்க செயலாளர் சங்கர் , இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் , இணைச்செயலாளர் சந்தோசு , கயத்தார் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் வசந்தக்குமார், சந்தோசு (வானரமுட்டி), ராசேசு (நாலாட்டின்புத்தூர்), கோவில்பட்டி மேற்கு ஒன்றிய இணைச்செயலாளர் சிவசுடலை உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மலர்வணக்கம் செலுத்தினர்.