5-7-2017 விவசாயிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | பெத்தநாயக்கன்பாளையம்

41

உரிமை மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு 45ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் –  சீமான் எழுச்சியுரை| பெத்தநாயக்கன்பாளையம் – நாம் தமிழர் கட்சி
========================================

விவசாயிகள் உரிமை மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் 45ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்திய நினைவேந்தல் பொதுக்கூட்டம்  05-07-2017 புதன்கிழமை மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம்,  பெத்தநாயக்கன்பாளையம், நம்மாழ்வார் திடலில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட  1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084