பெருந்தலைவர் காமராசர் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்

259
15-07-2017 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம் | நாம் தமிழர் கட்சி
 
எழுத்தறிவித்தவன் இறைவன்!
நமக்கு எழுத்தறிவித்த ஏந்தல்!
 
பசி வந்தால் பத்தும் பறக்கும்!
பசியோடு இருந்தால் பிள்ளைகளின் மனதில் எதுவும் பதிய மறுக்கும்; அதனால் மதிய உணவிட்டு, நமக்கு மதியை ஊட்டிய தயாளன்!
உண்மை, நேர்மை, எளிமை என அரசியலில் வாழ்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தில் மாபெரும் ஆளுமை செலுத்திய பெருந்தகை!
 
அரசியல் என்பது மக்களை வைத்துப் பிழைப்பது அல்ல; மக்களுக்காக உழைப்பது என்று உணர்த்திய உத்தமர்!
 
பெற்ற தாயினும் மேலாகத் தாய்நிலத்தை நேசித்த விடுதலைப் போராட்ட வீரர்!
 
நமது ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் இன்று (15-07-2017)
 
அந்த மகத்தான தலைவருக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
 
நாம் தமிழர்!
 
https://youtu.be/VqXWABtXZKk
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திஇனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம்! தூரிகைப்போராளி ஓவியர் வீரசந்தானம் – சீமான் புகழாரம்!
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – அண்ணாநகர் (சென்னை) (17-07-2017)