ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர்கோட்டம்

69

05-03-2017 ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
———————————————————————
புதுக்கோட்டை, காரைக்காலில் நிலத்தையும், வளத்தையும், நீரையும், காற்றையும் கெடுக்கும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்கும் கொடியத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 05-03-2017 காலை 10 மணியளவில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் பெருந்திரளாகப் பங்கேற்று புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இறுதியாக சீமான் கண்டனவுரையாற்றினார்.

செய்தியாளர் சந்திப்பு: https://www.youtube.com/watch?v=1hrDZVG_tEo


https://goo.gl/WOl83b


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி