சீமைக்கருவேல மரங்களை அழித்தொழிக்கும் ஆரம்பகட்ட களப்பணியில் கோவில்பட்டி நாம் தமிழர் கட்சியினர்

52

சீமைக்கருவேல மரங்களை அழித்தொழிக்கும் ஆரம்பகட்ட களப்பணியில் கோவில்பட்டி நாம் தமிழர் கட்சியினர்
06/08/2016 சனிக்கிழமை அன்று ஈடுபட்டனர்.

2010 ஆம் ஆண்டு செந்தமிழன் சீமான் அவர்களால் கயத்தார் அருகே அகிலாண்டபுரம் கிராமத்தில் மாவீரர்களை போற்றும் வகையில் 10000 மரக்கன்றுகள் நடப்பட்டது. தற்போது அதனை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால். அதை அகற்றும் பணியில் நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த சுற்றுசூழல் பாசறை சார்பாக 20 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை கயத்தார் ஒன்றியத்தலைவர் கனகராசு தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் இராசேசு கண்ணா அவர்கள் முன்னிலை வகித்தார்.. மேலும் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார், இளைஞரணி துணைச் செயலாளர் சந்தோஷ், கயத்தார் தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சண்முகராசு, கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன், இணைச்செயலாளர் விசயராசு, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசேசு, மேற்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி, ஒன்றிய தலைவர் செந்தூரபாண்டி, மாவட்ட மாணவர்பாசறை பொருப்பாளார்கள் சிவசுடலை மற்றும் கருப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்